அவங்க நிகழ்ச்சிக்கு மட்டும் நயன் வருவாங்களா?.. வரிசைகட்டிய விமர்சனம்

நயன்தாராவின் ஸ்கின் கேர் (சரும பராமரிப்பு) சம்பந்தமான அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனம் 9Skin. இந்த நிறுவனம் இன்று இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில், அதிகாரப்பூர்வமாக லான்ச் ஆனது. இந்த நிகழ்ச்சி மலேசியாவில் பிரமாண்டமாக நடந்தது.

நிகழ்ச்சியில் நயனின் கணவர் விக்னேஷ் சிவன்!

ஒரு விஷயம் சரியாக இருந்தால் மட்டுமே நயன்தாரா அந்த விஷயத்தை புரமோட் செய்ய முன் வருவார். பெரும்பான்மையான நேரங்களில், அவர் அவரது படங்களையே புரமோட் செய்ய முன்வருதில்லை. அதில் அவருடைய எண்ணம் என்பது, திரைப்படம் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்தத்திரைப்படமே தன்னைத்தானே புரமோட் செய்து கொள்ளும் என்பதாகும்.

இதில் விற்கப்படும் அழகு சாதன பொருட்கள் என்பது அவர் பயன்படுத்தி பார்த்தவையே!  இந்த நிறுவனத்திற்காக அவர் நிறைய உழைப்பைக் கொட்டி இருக்கிறார். அது எனக்கு மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருந்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here