RM38,191.99 மதிப்புள்ள மதுபானம் கடத்தியதாக இந்திய நாட்டவர் ஒருவர் கைது!

கிள்ளான், பிப்ரவரி 8 :

நேற்று, இங்குள்ள ஜாலான் செங்கி, தாமான் கிம் சுவான் என்ற இடத்தில் கடத்தப்பட்டதும் வரி செலுத்தப்படாததுமான மதுபானத்தை இடம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இந்திய நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

செல்லுபடியாகும் பயண ஆவணம் இல்லாத 45 வயதுடைய சந்தேக நபர், இரண்டு வாகனங்களுடன் பிற்பகல் 2.30 மணியளவில் அங்குள்ள அவரது இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக பட்டாலியன் 4 PGA செமினி கட்டளை அதிகாரி, கண்காணிப்பாளர்ரிசால் முஹமட் தெரிவித்தார்.

“வாகனத்தில் மேலும் சோதனை செய்ததன் விளைவாக, கடத்தப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு வகையான மற்றும் வரி செலுத்தாது, மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

“கைப்பற்றப்பட்ட மதுபானத்தின் மொத்தத் தொகை 172 அட்டைப்பெட்டிகள் ஆகும், இதன் மதிப்பு RM28,116, வரியுடனான மதிப்பு RM38,191.99 ஆகும்.

“இரண்டு வாகனங்கள் மற்றும் மொபைல் ஃபோனையும் போலீசார் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு RM100,107.99” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சுங்கச் சட்டம் 1967 மற்றும் குடிவரவுச் சட்டம் 1959/63 ஆகியவற்றின் படி மேலதிக விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட ஆடவரும், தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) கொண்டு செல்லப்பட்டதாக ரிசால் கூறினார்.

“இந்த கைதின் மூலம் கிள்ளான் பள்ளத்தகாக்கை சுற்றிலும் வரி விதிக்கப்படாத மதுபான விநியோக வலையமைப்பை உடைக்க முடிந்தது” என்று அவர் கூறினார்.

“எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறைக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here