திரெங்கானு மந்திரி பெசார் கெமாமான் தேர்தலுக்கு மாநில நிதியைப் பயன்படுத்தவில்லை

Petang tadi menyantuni penduduk UDM Kampung Tengah, UDM Kampung Berenjut dan UDM Kampung Geliga Besar di DUN Cukai. menerima dan menyambut kehadiran saya bersama petugas-petugas dengan ramah dan mesra. Picture from PAS FB#

பெட்டாலிங் ஜெயா:

கெமாமான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தனது சொந்தப் பணம், வாகனங்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பாஸ் கட்சியின் பய ன்படுத்தி பிரச்சாரம் செய்யப் போவதாக திரெங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார் தெரிவித்தார்.

பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் திரெங்கானு மந்திரி பெசார் தனது மாநிலத்திற்கு சொந்தமான பொருட்களை பயன்படுத்துவதாக கூறிய பாரிசான் நேசனலின் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார்.

“இந்த பிரச்சாரத்தில் நான் எனது சொந்த காரைப் பயன்படுத்துகிறேன், எம்பி கார் அல்ல. என்னால் முடிந்தவரை நடைமுறைக்கு ஏற்ப வாக்காளர்களைச் சென்றடைவதற்கு நான் பயன்படுத்தும் சொத்துக்கள் மற்றும் பொருட்கள் மாநிலத்துக்குச் சொந்தமானவை அல்ல, ஆனால் பாஸ் கட்சி மற்றும் எனக்குச் சொந்தமானது,” என்று பாஸ் துணைத் தலைவருமான அவர் கூறினார்.

“கெமாமன் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால், மற்ற பாஸ் மற்றும் பெரிகாத்தான் தலைவர்களின் படகுகளைப் பயன்படுத்த எனக்கு வாய்ப்புகள் உள்ளன. “உண்மையில், டான்ஸ்ரீ அன்னுார் மூசா பிரச்சார நோக்கங்களுக்காக தனது சொந்த படகை வழங்கியுள்ளார்,” என்று சம்சூரி கூறினார்.

கடந்த 15ஆவது பொதுத் தேரிகளில் பெரிகாத்தானின் வெற்றியை ரத்து செய்து, செப்டம்பர் 26 அன்று திரெங்கானு தேர்தல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து கெமாமான் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here