போர்ட்டிக்சனில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட எண்மர் கைது!

சிரம்பான், பிப்ரவரி 13 :

இங்கிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்போங் பத்து 6, லூகூட், போர்ட்டிக்சனில் உள்ள எண் இல்லாத ஒரு வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் உட்பட 8 பேர், நேற்று கைது செய்யப்பட்டனர்.

29 முதல் 50 வயதுக்குட்பட்ட எட்டு நபர்கள் சீனப் புத்தாண்டு சிறப்பு நடவடிக்கையாக Ops Limau இன் கீழ் இரவு 8.40 மணியளவில் கைது செய்யப்பட்டதாக போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர்,ஜடி ஷாம் முஹமட் தெரிவித்தார்.

“போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, இரண்டு தனித்தனி மேஜைகளில் இரண்டு குழுக்கள் காணப்பட்டன. ஒரு மேசையில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் அட்டைகளுடன் சூதாடிக்கொண்டிருந்தனர், அடுத்த மேசையைச் சுற்றி நான்கு ஆண்கள் மஹோங் விளையாடிக் கொண்டிருந்தனர்.

“பின்னர் போலீசார் மஹ்ஜோங் ஓடுகள், அட்டைகள், பகடைகள், மேசைகள், நாற்காலிகள், மஹோங் காகிதங்கள் மற்றும் RM728 ரொக்கத்தை கைப்பற்றினர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட எண்மரில் இருவருக்கு முந்தய குற்றம் மற்றும் போதைப்பொருள் பதிவுகள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

அதைத் தொடர்ந்து, எட்டு சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, திறந்த வீட்டு விளையாட்டுச் சட்டம் 1953 இன் பிரிவு 7 (2) இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப் படுவதாக ஐடி ஷாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here