ஜனவரி 31 அன்று காணாமல் போன முதியவர், தங்குவிடுதியின் அருகிலுள்ள புதர்களில் இறந்து கிடந்தார்

மலாக்காவில்  ஜனவரி 31 அன்று காணாமல் போன முதியவரின் அழுகிய உடல் ஒரு தங்குவிடுதிக்கு பின்னால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை (பிப்ரவரி 14) மாலை தெங்கேராவில் உள்ள ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள புதர்களில் 87 வயது முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மலாக்கா தெங்கா OCPD உதவி ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.

அந்த இடத்தில் அந்த நபரின் MyKadஐ நாங்கள் கண்டுபிடித்தோம். அது ஜனவரி 31 அன்று இங்கு பதிவு செய்யப்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான காவல்துறை அறிக்கையுடன் பொருந்துகிறது” என்று அவர் செவ்வாய்க்கிழமை (பிப். 15) கூறினார்.

இறந்தவர் இங்குள்ள தாமான் கோத்தா லக்‌ஷமணா பிரிவு இரண்டில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருவதாக ஏசிபி கிறிஸ்டோபர் தெரிவித்தார். இறந்தவருக்கு உடல்நலக் குறைபாடுகள் இருப்பதாகவும், வீட்டிற்குச் செல்லும் போது சம்பவ இடத்திலேயே விழுந்துவிட்டதாக நம்பப்படுகிறது என்றும் அவர் கூறினார். எந்தவொரு குற்றவியல் கூறுகளையும் போலீசார் கண்டறியவில்லை என்றும் இந்த வழக்கை திடீர் மரண அறிக்கையாக வகைப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here