வழக்கறிஞருக்கு கோவிட் தொற்று என்பதால் ரோஸ்மாவின் ஊழல் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு

டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரின் லஞ்சம் மற்றும் ஊழல் வழக்கு விசாரணை மீண்டும் தாமதமானது. அவரது வழக்கறிஞர் டத்தோ அக்பெர்டின் அப்துல் காதர்  கோவிட் -19  தொற்று உறுது  செய்ததால் என்று மலாய் மெயில் தெரிவித்துள்ளது.

அக்பர்டின் இன்னும் தனது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றும் பிப்ரவரி 12 முதல் 19 வரை ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இன்றைய வழக்கை ஒத்திவைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜைனி மஸ்லான் கூறினார். டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம் கேட்டுக்கொண்டதன் பேரில்,வழக்கு தேதி பிப்ரவரி 23 என நிர்ணயித்தார். இந்த விசாரணையில், ரோஸ்மா பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

டிசம்பர் 20, 2016 அன்று  Jepak Holdings  மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் சைடி அபாங் சம்சுதினிடம் இருந்து RM5 மில்லியன் லஞ்சம் மற்றும் RM1.5 மில்லியன் லஞ்சம் பெற்றனர். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சைடியிடம் இருந்து சரவாக் பள்ளிகளின் சூரிய ஆற்றல் விநியோகத் திட்டத்திற்காக RM187.5 மில்லியன் கோரியதாகவும், அவரிடமிருந்து RM6.5 மில்லியன் பணத்தைப் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கு மின்சாரம் வழங்கும் RM1.25 பில்லியன் திட்டத்தைப் பெற சைடியின் நிறுவனமான ஜெபக் ஹோல்டிங்ஸ்க்கு உதவுவதற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here