52 ஆண்டுகளுக்கு பிறகு மாமன்னர் தாமான் தாசேக் பெர்டானாவுக்கு வருகை

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா  ஆகியோர் தாமான் தாசேக் பெர்டானாவுக்கு நேற்று தங்கள் பேரக்குழந்தையான தெங்கு ஜைன் எடின் ஷா தெங்கு அபு பக்கர் அகமதுவுடன் ஒரு நாள் சுற்றுலா சென்றுள்ளனர்.

இஸ்தானா நெகாரா முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் படி, இரண்டு மணிநேர விஜயம் அவரது மாட்சிமைக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. ஏனெனில் அவர் கடைசியாக அங்கு சென்றதை நினைவு கூர்ந்தார்.

மாமன்னர்   1970 ஆம் ஆண்டு 11 வயது சிறுவனாக மாட்சிமை தங்கியவர் தாமான் தாசேக் பெர்டானாவிற்கு கடைசியாக சென்றது என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

இஸ்தானா நெகாராவின் கூற்றுப்படி, கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ மஹதி சே ங்காஹ் அவர்கள் மாலை 5 மணிக்கு தாமான் தாசேக் பெர்டானாவுக்கு வந்த மாமன்னர் தம்பதியரை வரவேற்றார்.

தமன் தாசேக் பெர்டானாவில் பார்வையாளர்களுடன் கலந்துகொண்டு புகைப்படம் எடுப்பதில் அவர்களின்  நேரத்தை செலவிட்டனர். தமான் தாசேக் பெர்டானாவின் பல்வேறு இடங்களில் தெங்கு ஜெய்ன் எடின் ஷாவுடன் மாமன்னர் தம்பதியர் எடுத்து கொண்ட 14 புகைப்படங்களும் பதிவில் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here