பயன்படுத்தபட்ட சமையல் எண்ணெய் ஏற்றி வந்த லோரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது

நீலாய் நெடுஞ்சாலையின் KM278.8 (வடக்கு) என்ற இடத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் லோரியில் இருந்து கவிழ்ந்ததில், வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (பிளஸ்) பயன்படுத்துவோர் நேற்று ஐந்து கிலோமீட்டர் வரையிலான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

மாலை 6.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் சமையல் எண்ணெய் சாலையில் பாய்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ட் முகமட் ஃபஸ்லி அப் ரஹ்மான் தெரிவித்தார்.

வெள்ளை நிற ஹினோ லோரியின் பின்பக்க டயர் வெடித்தன் காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

வலதுபுறத்தில் இருந்து இரண்டாவது பாதையில் இந்தச் சம்பவம் நடந்தது, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் பாதையை சுத்தம் செய்தனர். லோரி ஓட்டுநரை பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

39 வயதான ஆண் லாரி ஓட்டுநரின் உதவியாளருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், சாலை போக்குவரத்து விதிகள் 1959 (விதி 10 LN 166/59) விதி 10 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here