சிரம்பானில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் சாம்செங் ஜாலானான் நடவடிக்கையில் 7 பேர் கைது

சிரம்பான், பிப்ரவரி 20 :

நேற்று சிரம்பானைச் சுற்றி நடத்தப்பட்ட Ops Samseng Jalanan/Ops Mabuk என்று பெயரிடப்பட்ட நடவடிக்கையில், மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்த ஆறு இளைஞர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஒட்டிய ஒரு ஓட்டுநர் ஆகியோர் தனித்தனி இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

நெகிரி செம்பிலான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) தலைவர் ஷாபி முஹமட் இதுபற்றிக் கூறுகையில், 17 முதல் 21 வயதுடைய மோட்டார் வண்டி ஓட்டிகள் செனாவாங்கிலும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையிலும் (PLUS) இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

நடவடிக்கையின் போது, ​​இளைஞர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை உயர்த்தியும், ‘சூப்பர்மேன்’ சாகசம் செய்தும், தங்கள் மோட்டார் சைக்கிள்களில் படுத்துக்கொண்டும் , ஒருவரோடு ஒருவர் பந்தயம் செய்து கொண்டும்இருந்ததைக் காண முடிந்தது,” என்று இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக, 40 வயதான தனியார் துறை ஊழியர் ஒருவரும் இங்குள்ள ஜாலான் காயு ஆராவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அனைத்து நபர்களையும் ரிமாண்ட் உத்தரவுக்கு விண்ணப்பித்ததாகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவுகள் 42(1) மற்றும் 45A (1) இன் கீழ் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here