உங்களுக்கு கோவிட் தொற்று இருந்தால் MySejahteraவில் பதிவிடுங்கள் – கைரி வலியுறுத்தல்

கோவிட்-19 உறுதி  செய்த நபர்கள், அவர்கள் அனுபவிக்கும் அறிகுறிகளை தினமும் MySejahtera செயலியில் புதுப்பிக்க வேண்டும். இதனால் அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முழுவதும் அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படும்.

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடீன் டிவிட்டரில் பகிரப்பட்ட டிக்டோக் வீடியோவில், கோவிட்  பாதிக்கப்பட்டு அறிகுறிகள் கடுமையாக இருந்தால், அருகில் உள்ள சுகாதார நிலையத்தைத் தொடர்பு கொள்ளவோ அல்லது நேரடியாகச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

உங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம், நீண்ட நாள் காய்ச்சல், மார்பு வலி மற்றும் பசியின்மை இருந்தால் அறிகுறிகள் மற்றும் உங்கள் உடல்நிலையை கண்காணிக்கவும் என்று அவர் கூறினார்.

அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு கோவிட்-19 சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கைரி கூறினார்.

பாசிட்டிவ் என்று சோதனையில் வந்தால் பரிசோதனையின் முடிவை MySejahtera இல் தெரிவிக்கவும். தனிமைப்படுத்தலின் போது, ​​செய்ய வேண்டியவை பற்றிய அறிவிப்புகளைப் பெறுவீர்கள். இது ஒரு சுகாதார மதிப்பீட்டு கருவியாகும். அங்கு நீங்கள் உங்கள் அறிகுறிகளைப் புதுப்பிக்கலாம் என்று அவர் கூறினார்.

கைரி பொதுமக்களை எப்போதும் TRIIS – சோதனை, அறிக்கை, தனிமைப்படுத்தல், தகவல், தேடுதல் மற்றும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here