தொட்டில் துணியில் சிக்கி பெண்குழந்தை மரணம்!

சிரம்பான், பிப்ரவரி 23 :

இங்குள்ள பண்டார் ஸ்ரீ செண்டாயான், தாமான் நுசாரி அமான் 2ல் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில், நேற்று, ஒரு குழந்தையின் கழுத்தில் தொட்டில் துணி சிக்கி பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நந்தா மரோஃப் கூறுகையில், இந்தச் சம்பவத்தில், 15 மாதக் குழந்தையை குழந்தைபராமரிப்பாளர், அறையில் உள்ள தொட்டிலில் தூங்க வைத்துள்ளார்.

“முதற்கட்ட விசாரணையில், நண்பகல் 12.30 மணியளவில் குழந்தையை தூங்க வைப்பதற்கு முன், பால் கொடுத்ததாக கண்டறியப்பட்டது.

குழந்தை தூங்கியதும், அவர் மற்ற வேலைகளைச் செய்வதற்காக நண்பகல் 2 மணியளவில் அறையை விட்டு வெளியேறினார்.

“ஒரு மணி நேரம் கழித்து குழந்தை பராமரிப்பாளர் மீண்டும் அறைக்குள் நுழைந்தபோது, தொட்டில் துணி குழந்தையின் தலையில் சிக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையைக் கண்டார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உடனே அந்தக் குழந்தைப் பராமரிப்பாளர், குழந்தையை தொட்டிலில் இருந்து வெளியே எடுத்து அவசர சுவாச உதவியை (CPR) செய்தார், ஆனால் குழந்தையால் மீண்டும் சுவாசிக்க முடியவில்லை, அதனைத்தொடர்ந்து குழந்தையை செண்டாயான் ஹெல்த் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார்.

“குழந்தைக்கு மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் பணியில் இருந்த மருத்துவர் மாலை 4.30 மணியளவில் குழந்தை இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினார்,” என்று அவர் கூறினார்.

விசாரணையில், குழந்தை பராமரிப்பாளர் பார்க்கும்போது பாதிக்கப்பட்ட குழந்தை மயங்கிய நிலையில் காணப்பட்டதாக நந்தா கூறினார்.

“குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக இங்குள்ள துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு (HTJ) அனுப்பப்பட்டது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here