9,000 வெள்ளி மதிப்புள்ள உறைந்த கோழி இறைச்சி கடத்தல் முயற்சி கடல்சார் போலீசாரால் முறியடிப்பு

தும்பாட், பிப்ரவரி 23 :

நேற்று, கடல்சார் போலீசார் இங்கு நடத்திய அதிரடி நடவடிக்கையில் சுமார் 9,000 வெள்ளி மதிப்புள்ள உறைந்த கோழி இறைச்சிகள் கொண்ட 60 பெட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இருப்பினும், பெங்கலான் குபோரில் உள்ள பூலாவ் உலரிலுள்ள ஒரு சட்டவிரோத படகுத்துறையில் நடந்த நடவடிக்கையில் யாரும் கைது செய்யப்படவில்லை.

கிளந்தான் கடல்சார் போலீஸ் மூன்றாம் பிராந்திய கமாண்டர் துணை கமிஷனர் நோர்சைட் முஹம்மது கூறுகையில், பெங்கலான் குபோரில் இருந்து வந்த ஒரு கடல்சார் போலீஸ் குழு, காலை 6 மணியளவில் கோலோக் ஆற்றங்கரைக்கு அருகே பல நபர்களை பார்த்தனர்.

“கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் பலர், படகில் இருந்து ஆற்றங்கரைக்கு பெட்டிகளை நகர்த்துவதை கடல் அதிகாரிகள் பார்த்தனர்.

அதிகாரிகள் அந்த இடத்திற்கு வருவதைக் கண்டு, அந்த நபர்கள் படகில் ஏறி தப்பிச் சென்றனர்.

பின்னர் அப்பெட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்ததில், பெட்டிக்குள் உறைந்த கோழி இறைச்சி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

உறைந்த கோழி இறைச்சி தாய்லாந்தில் இருந்து உள்ளூர் விநியோகத்திற்காக கடத்தப்பட்டதாக நம்புவதாக நோர்சைட் கூறினார்.

அண்டை நாட்டிலிருந்து உறைந்த கோழி இறைச்சிகளை மாநிலத்தின் உள்ளூர் சப்ளையர்களிடமிருந்து அதிக தேவைகளை அந்தக்கடத்தல்காரர்கள் பெற்றிருக்கலாம் என தாம் நம்புவதாக அவர் கூறினார்

மேலும் கடத்தல் நடைபெறாமல் தடுக்க, கோலோக் ஆற்றங்கரையில் கடல்சார் போலீசார் தங்களது சோதனைகளை தீவிரப்படுத்துவார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here