உக்ரைன் மீது குண்டுமழை பொழியும் ரஷ்யா!!

ரஷியா,பிப்ரவரி 24:

ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்க உத்தரவிட்டுள்ள நிலையில், ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

தலைநகர் கியூ மற்றும் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது.

ரஷியாவின் ராணுவ படைகள் உக்ரைன் எல்லையில் நுழைய தொடங்கின. கார்கிவ் நகரை நோக்கி ரஷிய ராணுவ படைகள் முன்னேறுகின்றன.

இந்நிலையில் ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாவது:” ரஷியா தாக்குதல் நடத்துவது ஆக்கிரமிப்பு போர். ரஷியாவின் ஆக்கிரமிப்பு போரில் இருந்து உக்ரைன் தன்னை தற்காத்து கொள்ளும்” என அவர் கூறினார்.

போரின் எதிரொலியாக, கச்சா எண்ணெய் விலையும் 100 அமெரிக்க டோலராக உயர்ந்து உள்ளது.

உக்ரைனின் கிழக்கு துறைமுக நகரில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here