கோலக்கிராய், கம்போங் எங்கோங்கில் வெள்ளம் ; ஆறு குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிப்பு

கோலக்கிராய், பிப்ரவரி 25 :

நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, இங்குள்ள கம்போங் எங்கோங்கில் ஆறு குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது குடியிருப்புப் பகுதிக்கு செல்லும் சாலையில் 0.5 மீட்டர் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அரசு ஊழியர் சாயிட் அகமட், 51, கூறுகையில், நேற்று நண்பகல் முதல், கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பெரும்பாலான குடியிருப்புவாசிகள் தங்கள் வாகனங்களை உயரமான பகுதிகளுக்கு கொண்டு செல்ல தொடங்கியுள்ளனர்.

இவர்களது வீட்டுப்பகுதி சாலையை விட உயரமான இடத்தில் இருந்தாலும், இன்று காலை வரை கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர்கள் இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

“இப்போதைக்கு, நாங்கள் இன்னும் எங்கள் குடியிருப்புகளில் வசிக்கிறோம். இருப்பினும், கம்போங் மெங்கேபாங்கில் உள்ள எனது சகோதரியின் குடியிருப்பு (சித்தி ரோகியா அகமட் , 30) இன்று அதிகாலையில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

“நாங்கள் அனைவரும் முக்கியமான ஆவணங்களை மூட்டை கட்டி, வீட்டு உபயோகப் பொருட்களை உயரமான இடத்தில் வைத்துள்ளோம், மேலும் கனமழை தொடர்ந்தால், வெள்ள நிவாரண மையத்திற்கு (PPS) வெளியேற்ற தயாராக உள்ளோம் ,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

நேற்று முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, கோலக்கிராயில் உள்ள மூன்று ஆறுகள் இன்று காலை எச்சரிக்கை அளவை விட அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here