ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலி; உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை

உக்ரேன் ரஷ்யா போர் தொடுக்கும் நடவடிக்கைகளை தடுக்க உலக நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் முயற்சித்து வருகின்றன. ஆனால், எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் உக்ரேன் மீதான போர் தொடங்கப்படுகிறது என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வியாழக்கிழமை அறிவித்தார். இந்தப் போர் என்பது இரு நாடுகளின் மக்களுக்கு மட்டுமல்ல. உலக நாடுகளின் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதாவது, கச்சா எண்ணெய் வணிகத்தில் மிகப் பெரிய ஏற்றுமதியாளராக ரஷியா உள்ளது. இந்நிலையில், உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுப்பதால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக அனைத்துலக சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

அனைத்துலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்யும் பிரெண்ட் அமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை நிர்ணயம் செய்யப்பட்ட அளவின்படி, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 101.07 டாலராக உள்ளது. இது முந்தைய விலையை காட்டிலும் 1.99 டாலர் அல்லது 2 சதவீதம் கூடுதலாகும். இதேபோன்று வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டெர்மீடியேட் சார்பில் நிர்ணயம் செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 94.70 டாலராக உள்ளது. இது முந்தைய விலையைக் காட்டிலும் 1.89 டாலர் அல்லது 2 சதவீதம் அதிகமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here