கிளாந்தானில் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருப்போர் எண்ணிக்கை 7,976 பேராக குறைந்துள்ளது

கோத்தா பாரு, பிப்ரவரி 28 :

கிளாந்தானில் இன்று காலை வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்த 8,439 பேருடன் ஒப்பிடுகையில், இன்று பிற்பகல் அது 7,976 பேராக குறைந்துள்ளது.

2,567 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் ஆறு மாவட்டங்களில் திறக்கப்பட்ட 51 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றுவரை, பாசீர் மாஸ், கோலக்கிராய், தானா மேரா, ஜெலி, பாசீர் பூத்தே மற்றும் மச்சாங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளன.

கோத்தா பாருவில் செயல்பாட்டிலிருந்த ஒரு தற்காலிக வெள்ள நிவாரண மையம், அங்கிருந்த பாதிக்கப்பட்ட அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிய பிறகு, இன்று மூடப்பட்டது.

சமூக நலத்துறையின் பேரிடர் தகவல் போர்ட்டலின் அடிப்படையில், இன்று மாலை 4 மணி நிலவரப்படி, பாசீர் மாஸில் உள்ள 19 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 5,943 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, கோலக்கிராயிலுள்ள 10 நிவாரண மையங்களில் 882 பேரும், தானா மேராவிலுள்ள 5 நிவாரண மையங்களில் 464 பேரும், பாசீர் பூத்தேயிலுள்ள 5 நிவாரண மையங்களில் 286 பேரும்,மச்சாங்கிலுள்ள 5 நிவாரண மையங்களில் மொத்தம் 230 பேரும், ஜெலியிலுள்ள ஒரு நிவாரண மையத்தில் 34 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here