திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,742 ஆக தொடர்ந்து அதிகரிப்பு

கோல திரெங்கானு, மார்ச் 1 :

திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 15,398 பேருடன் ஒப்பிடுகையில், இன்று காலை மாநிலம் முழுவதும் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் மொத்தம் 17,742 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிகரித்துள்ளனர்.

இம்மாநிலத்தில் 4,557 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடமளிக்க 141 தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, செயல்பாட்டிலுள்ளன.

நேற்றிரவு, மொத்தம் 3,965 குடும்பங்ககளைச் சேர்ந்தவர்ககள் 139 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்று திரெங்கானு மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத்தின் அறிக்கையில் தெரிவித்தது.

வெள்ளத்தால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்ட பகுதியாக கெமாமனில் 8,027 பேர் 27 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டிருகின்றனர். அதனைத்தொடர்ந்து உலு திரெங்கானுவில் மொத்தம் 3,700 பேர் 21 நிவாரண மையங்களிலும், டுங்கூனில் மொத்தம் 2,988 பேர் 29 நிவாரண மையங்களிலும், பெசூட்டில் மொத்தம் 908 பேர் 26 நிவாரண மையங்களிலும், செத்தியூவில் மொத்தம் 848 பேர் 21 நிவாரண மையங்களிலும், கோல திரெங்கானுவில் மொத்தம் 728 பேர் 9 நிவாரண மையங்களிலும், கோல நெராஸில் மொத்தம் 538 பேர் 7 நிவாரண மையங்களிலும், மாராங்கில் மொத்தம் 5 பேர் 1 நிவாரண மையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here