திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 17,384 பேராக உள்ளது

கோல திரெங்கானு, மார்ச் 2:

திரெங்கானுவில் உள்ள ஏழு மாவட்டங்கள் ஐந்தாவது அலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள. இங்கு மொத்தம் 17,384 பேர் இன்னும் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் வெள்ளத்தில் இருந்து மீண்ட மாராங் மாவட்டத்தைத் தவிர, 4,549 குடும்பங்களைச் சேர்ந்த 17,384 பேர் திரெங்கானு முழுவதும் உள்ள 86 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 4,127 குடும்பத்தை சேர்ந்த 16,078 பேர் பாதிக்கப்பட்டு 98 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்த நிலையில், இன்று அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திரெங்கானு மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகத்தின் அறிக்கையின் அடிப்படையில், கெமாமன் மாவட்டம் இன்னும் அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களை பதிவு செய்துள்ளது.

அம்மாவட்டத்தில் 2,358 குடும்பங்களை சேர்ந்த மொத்தம் 9,245 பேர் 27 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது நேற்று பிற்பகல் 2,114 குடும்பங்களை சேர்ந்த மொத்தம் 8,408 பேராக இருந்தது.

உலு திரெங்கானுவில், 969 குடும்பங்களை சேர்ந்த 3,835 பேர் 19 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருக்கின்றனர்.

டுங்கூனில் 823 குடும்பத்தை சேர்ந்த 2,795 பேர் 24 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களிலும், கோல நெராஸில் 502 பேர் 5 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களிலும், கோல திரெங்கானுவில் 490 பேர் 4 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களிலும், பெசூட்டில் 89 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 355 பேர் 4 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

செத்தியூவில் ஆகக்குறைவாக 42 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 152 பேர் 3 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here