செராஸ் ஸ்டேடியத்தில் கால்பந்து ரசிகர்களுக்கு இடையே நடந்த சண்டையில் இருவர் கைது

செராஸ் ஸ்டேடியத்திற்கு வெளியே சனிக்கிழமை (மார்ச் 5) நடந்த சண்டையைத் தொடர்ந்து இரண்டு கால்பந்து ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவு 12.30 மணியளவில் கோலாலம்பூர் சிட்டி மற்றும் சிலாங்கூர் எஃப்சி ரசிகர்களுக்கு இடையே நடந்த சண்டையில் போலீசார் தலையிட்டு நிறுத்த முயன்றதாக செராஸ் OCPD  முஹம்மது இட்ஸாம் ஜாஃபர் கூறினார்.

போலீசார் சண்டையை நிறுத்த முயன்றபோது, சந்தேக நபர்கள் இருவர் அறிவுரைகளை ஏற்க மறுத்தனர். ஒரு பொது ஊழியரை தனது கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இருவரும் 22 மற்றும் 23 வயதுடையவர்கள் என்று அவர் சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இருவரும் மார்ச் 7ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க செராஸ் போலீசார் தயங்க மாட்டார்கள். சட்டத்திற்கு முரணான இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here