ஊரடங்கில் 1,400 கி.மீ பயணித்து என் மகனை மீட்டேன், ஆனால் இப்போது – உக்ரைனில் மகன்; கலங்கும் தாய்

2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ரஷியா பேகமும் ஒருவர். தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ரஷியா பேகம், 16 ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவனை இழந்தவர். இவர் தனது இரண்டு மகன்களுடன் தெலங்கானா மாநிலத்தில் வசிக்கிறார்.

கடந்த 2020-ல் ஊரடங்கின்போது அண்டை மாநிலமான ஆந்திராவின் நெல்லூரில் சிக்கித் தவித்த தன் மகனை மீட்க, 1,400 கிலோமீட்டர் ஒற்றைப் பெண்ணாக காவல்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் மூன்று நாள் பயணித்து, தன் மகனை அழைத்து வந்தார். அதனால், அவர் அந்த நேரத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது அவரின் 19 வயது மகன் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கியிருக்கிறார். கிழக்கு ஐரோப்பிய தேசத்தின் ரஷ்ய எல்லைக்கு அருகில் சுமி. அங்கிருக்கும் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் ரஷியா பேகத்தின் மகன் நிஜாமுதீன் அமான்.

நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் தீவிரமடைந்துவரும் சூழலில், தன் மகனும் மற்ற இந்திய மாணவர்களும் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வதாகக் கூறுகிறார் ரஸியா பேகம்.

இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “சுமியில் மருத்துவம் பயிலும் என் மகனும், பிற இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும். இந்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். என் மகன் நிஜாமுதீன் அமானும் இன்னும் சில மாணவர்களும் பதுங்கு குழிகளில் தங்கியிருக்கிறார்கள். என் மகன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னிடம் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here