கோத்தா பாரு. மார்ச் 6 :
கிளாந்தனில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ,நேற்று இரவு 544 குடும்பங்களைச் சேர்ந்த 1,879 பேருடன் ஒப்பிடும்போது, இன்று காலை 414 குடும்பங்களைச் சேர்ந்த 1,437 ஆகக் குறைந்துள்ளது.
சமூக நலத் துறையின் (JKM) பேரிடர் தகவல் போர்ட்டலின் அடிப்படையில், காலை 8 மணி நிலவரப்படி, அவர்கள் அனைவரும் பாசீர் மாஸில் உள்ள 4 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களிலும், தும்பாட்டில் உள்ள ஒரு நிவாரண மையத்திலுமாக மொத்தம் 5 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.
அவர்களுள் 485 ஆண்கள், 495 பெண்கள், 208 சிறுவர்கள் மற்றும் 238 சிறுமிகள் மற்றும் 11 குழந்தைகள் ஆகியோர் அடங்குவர்.
மாநிலத்தின் அனைத்து முக்கிய ஆறுகளும் தற்போது இயல்பான மட்டத்தில் இருப்பதாக நீர்பாசன மற்றும் வடிகால் திணைக்களம் (DID) அதன் இணையதளம் மூலம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வெள்ள அபாயத்தின் போது மூடப்பட்ட கிளாந்தானில் உள்ள மூன்று பகுதிகளுக்கு, இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை என்று தெனகா நேஷனல் பேர்ஹாட் (TNB) தெரிவித்துள்ளது.
கிளாந்தானின் தும்பாட்டில் உள்ள பூலாவ் டோலா மற்றும் பெங்கலான் ராகிட் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை மற்றும் பாசீர் மாஸில் உள்ள தேலாண்ட் 2 நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை ஆகியவை மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.