TNB அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இரு வர்த்தகர்களின் தடுப்புக்காவல் நீட்டிப்பு

சிரம்பான், மார்ச் 6 :

கடந்த ஆண்டு நெகிரி செம்பிலானைச் சுற்றியுள்ள பிட்காயின் சுரங்க நடவடிக்கைகளுக்கான, மின்சாரம் திருடப்பட்டதை மறைக்க TNB அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வர்த்தகர்களின் தடுப்புக்காவல், மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் மார்ச் 1 முதல் 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் எம்ஏசிசி லாக்-அப் சட்டை அணிந்து, இன்று காலை 10 மணிக்கு சிரம்பான் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் ரிமாண்ட் காலத்தை நீட்டிக்கும் விண்ணப்பத்தை MACC வழக்கு விசாரணை அதிகாரி முகமட் கைரி அப்துல் கரீம் சமர்ப்பித்தார்.

49 மற்றும் 50 வயதுடைய சந்தேக நபர்களுக்கு எதிராக மார்ச் 8 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை உதவிப் பதிவாளர் மாஸ் அஸ்மிமின் அஹ்மட் இன்று சிரம்பான் சிறப்பு நீதிமன்றத்தில் பிறப்பித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2021 முதல் ஜனவரி வரை, இரண்டு சந்தேக நபர்களும் TNB தெற்கு மண்டல அதிகாரிகளுக்கு (மலாக்கா /ஜோகூர்/நெகிரி செம்பிலான்) மொத்தம் RM75,000 லஞ்சம் கொடுத்தனர்.

பிட்காயின் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நெகிரி செம்பிலானைச் சுற்றியுள்ள பல வளாகங்களில் மின்சார விநியோகத்தைத் திருடும் செயல்பாட்டைப் பாதுகாப்பதற்கான ஊக்கமாக இது வழங்கப்பட்டது.

இரண்டு சந்தேக நபர்களும் முன்னதாக பிப்ரவரி 28 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு நெகிரி செம்பிலான் MACC அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர்.

MACC சட்டம் 2009 இன் பிரிவு 17 (b) இன் படி விசாரணை நடத்தப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்படடால் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் லஞ்சத்தின் மதிப்பில் ஐந்து மடங்கு அபராதம் அல்லது RM10,000 அல்லது எது அதிகமோ அதை வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here