கோவிட் தொற்றினால் நேற்று 1,756 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோவிட்-19 தொற்றினால் நேற்று 1,756 புதிதாக மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 1,032 வழக்குகள் வகை 1 மற்றும் 2 லும், 724 வழக்குகள் வகை 3, 4 மற்றும் 5 இல் இருந்தன. சிலாங்கூர் 265 புதிய சேர்க்கைகளுடன் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஜோகூர் (213) மற்றும் பேராக் (210) உள்ளன. நேற்று 1,339 நோயாளிகள் இல்லம் திரும்பினார்.

ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர்டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட் -19 தீவிர சிகிச்சை பிரிவுகள் (ஐசியுக்கள்) அவற்றின் மொத்த கொள்ளளவான 885 படுக்கைகளில் 43% இல் உள்ளன என்றார். சிலாங்கூர் (83%), புத்ராஜெயா (83%), ஜோகூர் (70%), கிளந்தான் (69%), மற்றும் கோலாலம்பூர் (54%) ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள ICU படுக்கைகள் 50% திறனைத் தாண்டியுள்ளன.

மொத்தம் 216 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. அவர்களின் அதிகபட்ச திறனில் 24% வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிலாங்கூர் (118%), புத்ராஜெயா (106%), பெர்லிஸ் (98%), கோலாலம்பூர் (92%), பேராக் (90%), கிளந்தான் (88%) ஆகிய இடங்களில் சாதாரண கோவிட்-19 படுக்கைகளின் பயன்பாடு 50% திறனைத் தாண்டியுள்ளது.  தெரெங்கானு (78%), பகாங் (70%), ஜோகூர் (66%), சரவாக் (64%), பினாங்கு (58%), மற்றும் சபா (51%).

கோவிட்-19 மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கான பொது மருத்துவமனைகளின் மொத்தத் திறனைப் பொறுத்தவரை, ஆபத்தான படுக்கைகள் 67% ஆகவும், 59% ஐசியுக்கள் பயன்பாட்டில் உள்ளன. நேற்று நான்கு  கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளன. மலேசியாவின் கோவிட்-19 தொற்று விகிதம் (R-nought அல்லது R0) 1.05 ஆக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here