சிலாங்கூரில் பெய்த கனமழை காரணமாக, வாகன நிறுத்துமிடத்தில் மரங்கள் விழுந்ததில் 24 வாகனங்கள் சேதம்

கோலாலம்பூர், மார்ச் 7:

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் இன்று பெய்த கனமழை காரணமாக, துவாங்கு முஹ்ரிஸ் அதிபர் மருத்துவமனை (HCDM), யூனிவர்சிட்டி கெபாங்சான் மலேசியாவின் (UKM) வாகன நிறுத்துமிடத்தில் மரங்கள் விழுந்ததில் மொத்தம் 24 வாகனங்கள் சேதமடைந்தன.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக மரத்தை வெட்டி அகற்றி வருவதாக, செராஸ் மாவட்ட காவல்துறை தலைமை உதுணை ஆணையர் முஹமட் இட்ஸாம் ஜாபர் தெரிவித்தார்.

“பிற்பகல் 3.15 மணியளவில் இங்குள்ள ஜாலான் ஸ்ரீ பெர்மைசூரி பண்டார் ஸ்ரீ பெர்மைசூரியில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது.

“தகவல் கிடைக்கப்பெற்றதும் கோலாலம்பூர் மாநகர சபை (DBKL) அந்த இடத்தில் உள்ள மரத்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்று அவர் கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் மாலையில் இடியுடன் கூடிய கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதை முஹமட் இட்ஸாம் அறிவுறுத்தினார்.

“மேலும் மெனாரா PGRM அருகே நடைபாதையில் வெள்ளம் காரணமாக நான்கு வாகனங்கள் சிக்கிக்கொண்டது தொடர்பான அறிக்கைகளையும் நாங்கள் பெற்றோம்.

“அதுமட்டுமின்றி, பெக்கான் சாலாக் செலாத்தானில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு உயர்ந்துள்ளதால், அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும்” அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here