வங்சா மாஜூவில் ஏற்பட்ட நிலச்சரிவில், 5 வீடுகள் சேதம்

கோலாலம்பூர், மார்ச் 8 :

நேற்று பெய்த கனமழையால், திடீரென நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜாலான் 1/27D, பிரிவு 6, வங்சா மாஜூவில் உள்ள தனியார் நிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், 5 வீடுகளை உள்ளடக்கிய 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர் மாநகர சபை (DBKL) வெளியிட்ட ஒரு அறிக்கையில், ரோயல் மலேசியன் போலீஸ் (PDRM), மலேசியன் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) மற்றும் மலேசிய பொதுப்பணித்துறை (APM) ஆகியவற்றால் சம்பவ இடத்தில் 24 மணி நேர கண்காணிப்பிற்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டன.

“பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு முதலுதவி வழங்க அமலாக்கத் துறையின் மீட்புப் பணியாளர்கள் DBKL செத்தியாவங்சா கிளை அலுவலகம், செத்தியாவங்சா குடியிருப்பாளர்கள் பிரதிநிதி கவுன்சில், PDRM, தீயணைப்பு படை மற்றும் APM உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்,” என்று அந்த அறிக்கையில் தெரிவித்தது.

முன்னதாக, ஜேபிபிஎம் கோலாலம்பூர் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர், இங்குள்ள தாமான் கெம்பிரா மற்றும் பிரிவு 6, வங்சா மஜூ ஆகிய இடங்களில் இரண்டு நிலச்சரிவு அறிக்கைகள் கிடைத்ததாகக் கூறினார்.

தாமான் கெம்பிராவில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை மற்றும் வீடுகளுக்கு சேதம் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here