கெடாவில் டிங்கி பாதிப்பு 177 விழுக்காடு அதிகரிப்பு

அலோர் ஸ்டார், மார்ச் 9 :

கெடாவில் ஜனவரி 1 முதல் நேற்று வரை டிங்கி பாதிப்பு 177.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது 101 பேருக்கு டிங்கி நோய் கண்டறியப்பட்டுள்ளது என்று மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் ஓத்மான் வாரிஜோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 57 பேர் டிங்கியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 158 பேர் டிங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​கெடாவில் டிங்கி பாதிப்புகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளாக மழைவீழ்ச்சி அதிகரிப்பு மற்றும் மக்கள் நடமாட்டத்தின் அதிகரிப்பு ஆகியவை உள்ளன.

“இதன் விளைவாக, அனைத்து டிங்கு பாதிப்பு உள்ள பகுதிகளிலும் நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க, தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

“செயல்படுத்தப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளில், வளாகங்களை ஆய்வு செய்தல், கிருமிநாசினி (mist) தெளித்தல், இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுதல் மற்றும் சுகாதார கல்வியை மக்களுக்கு வழங்குதல் ஆகியவை அடங்கும்” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

டாக்டர் ஓத்மான் மேலும் கூறுகையில், நேற்று வரை மொத்தம் 65,890 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு, நோய் – சுமந்து செல்லும் பூச்சிகளை அழிக்கும் சட்டம் (APSPP) 1975 இன் கீழ் ஏடிஸ் கொசுக்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாகக் கண்டறியப்பட்ட வளாகங்களின் உரிமையாளர்களுக்கு 941 அபாரதங்கள் வழங்கப்பட்டன.

மேலும் டிங்கு பரவுவதைத் தடுக்க, சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்துதல், ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழித்தல் போன்ற பணிகளை சமூகத்தினரும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here