புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்; இன்னமும் 42 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்

கோலாலம்பூர்:

சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட எரிவாயு குழாய் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 145 பேரில், அவசர சிகிச்சைப் பிரிவில் ஒருவர் உட்பட 42 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் ஒருவர் அம்பாங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிசசை பெற்றுவரும் நிலையில், ஏனைய 23 பேர் ஏனைய MOH அமைச்சின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 18 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் MOH வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here