கோவிட் தொற்றினால் நேற்று 1,967 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு  நேற்று 1,967 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 1,276 தொற்றுகள் வகை 1 மற்றும் 2, மற்றும் 691 வகை 3, 4 மற்றும் 5.

சிலாங்கூர் 262 புதிய சேர்க்கைகளைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து பேராக் (249) மற்றும் ஜோகூர் (223) உள்ளன. நேற்று 1,686 நோயாளிகள் இல்லம் திரும்பியிருக்கின்றனர்.

ஒரு அறிக்கையில்  சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICUs) அவற்றின் மொத்த கொள்ளளவான 881 படுக்கைகளில் 42% இல் இருப்பதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here