சிலாங்கூர், ஜோகூர் மற்றும் மலாக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 449 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர், மார்ச் 10 :

இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஜோகூர், மலாக்கா மற்றும் சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 449 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை முகாமைத்துவத்தின் (NADMA) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் (NDCC) இன்று காலை அதன் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட, தேசிய பேரிடர் சம்பவங்கள் பற்றிய சமீபத்திய அறிக்கையில் இதனைத் தெரிவித்தது.

நேற்று ஜோகூரில் பெய்த கனமழையை தொடர்ந்து, குளுவாங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் அங்குள்ள மூன்று PPSக்கு வெளியேற்றப்பட்டனர்.

அதே சமயம் மலாக்காவில், ஜாசின் மாவட்டத்தை உள்ளடக்கிய 11 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 40 பேர் SK பாரிட் பெங்குலுவிலுள்ள PPSஇல் தங்க வைக்கப்பட்டனர், இது செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

இதற்கிடையில், சிலாங்கூரில், கோலா லங்காட் மற்றும் செப்பாங் மாவட்டங்களில் உள்ள 55 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 207 நபர்கள், அங்குள்ள 4 PPSக்கு மாற்றப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையில் நட்மா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here