பூச்சோங், மார்ச் 11:
பூச்சோங் பிரிமாவில் உள்ள வங்கிக்கு அருகே, இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாதுகாவலர் உயிரிழந்தார், அவரது சக நண்பர் காயமடைந்தார்.
சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் அப்துல் காலித் ஓத்மான் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் இரண்டு பாதுகாப்பு காவலர்கள் ஒரு பாதுகாப்பு வேனில் ஒரு தொகை பணத்தை எடுத்துச் சென்றபோது இச்சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
எனினும், பாதிக்கப்பட்ட இருவரையும் துப்பாக்கியால் சுட்ட சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட இருவரும் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வாகனத்திற்கு சென்றார்களா அல்லது வாகனத்திலிருந்து பணத்தை வங்கிக்கு கொண்டு சென்றார்களா என்பது குறித்து, இன்னும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.