அழகு நிலையத்திற்குள் புகுந்து இன்ஸ்டாகிராம் தோழியை கத்தி முனையில் மிரட்டிய இளைஞர்

குஜராத் மாநிலம் பதன் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் தஸ்ரத். இவருக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் வர்கா மார்க்கெட் பகுதியில் அழகு நிலையத்தில் வேலை செய்து வரும் பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக நட்பாக பழகி வந்துள்ளனர்.இந்த சூழலில், அந்த பெண் திடீரென பிரகாஷுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், நேராக அந்த பெண் பணியாற்றும் அழகு நிலையத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பணயக்கைதி போல் பிடித்து வைத்துள்ளார்.இதற்கிடையில் உதவி கேட்டு அந்த பெண் அழகு நிலையத்தின் உரிமையாளருக்கு ரகசியமாக தகவல் கொடுத்திருக்கிறார். இது குறித்து அழகு நிலையத்தின் உரிமையாளர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். மேலும், பெண்ணை கத்தி முனையில் பிடித்து வைத்த பிரகாஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here