சாலையில் வண்டல் மண் படிவு காரணமாக இந்தோனேசிய தூதரகத்திற்கு முன்பாக உள்ள இரு சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டன

கோலாலம்பூர், மார்ச் 12 :

இங்குள்ள ஜாலான் துன் ரசாக்கில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள இரண்டு இடது மற்றும் நடுப் பாதைகள் இன்று வண்டல் படிந்ததால் மூடப்பட்டன.

கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர், துணை ஆணையர் சரிபுடின் முகமட் சலே இதுபற்றிக் கூறுகையில், காலை 9 மணியளவில் ஒன்று முதல் ஐந்து சென்டிமீட்டர் ஆழத்தில் மண் படிந்திருந்தது என்று அவர் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, இந்த சம்பவம் இரண்டு இடதுபுற பாதைகள் மற்றும் சாலையின் நடுப்பகுதி என்பன மூடப்பட்டது, மேலும் வலதுபுறம் உள்ள பாதை மட்டுமே வாகனங்கள் செல்ல திறக்கப்பட்டது.

“கோலாலம்பூர் மாநகர சபை (DBKL) மற்றும் சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆகியவற்றின் விசாரணை மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாலையில் செல்வோர், அந்த இடத்தில் பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.

சரிபுடின் மேலும் கூறுகையில், இதுதொடர்பில் ஏதேனும் கேள்விகள் அல்லது தகவல் இருப்பவர்கள் சாலை போக்குவரத்து காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். துன் எச்எஸ் லீ 03-2071 9999 அல்லது JSPT கோலாலம்பூர் ஹாட்லைன் 03 –20260267/69 அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்தை அழைக்கலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here