மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 84 வயது முதியவரை காணவில்லை

ஈப்போ, மார்ச் 12:

கடந்த வெள்ளிக்கிழமை, பிற்பகல் முதல் இங்குள்ள புன்சாக் ஜெலபாங்கில் மலை ஏறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மூத்த குடிமகன் ஒருவர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

84 வயதான முதியவர், நேற்று மாலை 3 மணியளவில் காணாமல் போனதாக அவரது குடும்ப உறுப்பினர்களால் புகாரளிக்கப்பட்டது.

இன்று அதிகாலை 1.17 மணியளவில் மேரு ராயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தது, பாதிக்கப்பட்டவர் காணாமல் போனது குறித்து தெரிவிக்கப்பட்டது.

மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) பேராக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுபற்றிக் கூறியதில், முதியவர் காணாமல் போனதாக நம்பப்படும் பாதையில் தேடுதல் பணி இன்னும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

“துப்பறியும் நாய் பிரிவு (K9), மல்டி ஸ்கில் டீம் யூனிட் (MUSTeam) மற்றும் ட்ரோன் பிரிவு ஆகியவை தேடுதல் பணியில் உதவுவதற்காக திரட்டப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை, காணாமல்போனவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here