மறைந்த ஹாக்கி வீரர் சிவபாலனின் மறைவுக்கு மாமன்னர் தம்பதியர் இரங்கல்

முன்னாள் தேசிய ஹாக்கி வீரர் எஸ்.சிவபாலனின் குடும்பத்தினருக்கு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இஸ்தானா நெகாரா தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் அவரது மறைவுக்கு மாண்புமிகுகள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததாகவும், இந்த கடினமான நேரத்தை எதிர்கொள்வதில் அவரது குடும்பத்தினர் பொறுமையாகவும் உறுதியாகவும் இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டிற்கான அவரது சேவைகள், செயல்கள் மற்றும் தியாகங்களை அவர்களின் மாண்புமிகுகள் பெரிதும் பாராட்டுகிறார்கள். மேலும் அவரது மறைவு நாட்டின் ஹாக்கிக்கு ஒரு பெரிய இழப்பு என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 13) பதிவில் கூறியது.

59 வயதான சிவபாலன், ஈப்போவில் உள்ள பேராக் சீக் யூனியன் கிளப் மைதானத்தில் ராயல் ஈப்போ கிளப்பின் 125 ஆவது ஆண்டு விழாவை நினைவுகூரும் ஹாக்கி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது பிற்பகல் 3.30 மணியளவில் சரிந்து விழுந்தார்.

அவரை உயிர்ப்பிக்கும் முயற்சி தோல்வியடைந்தது, பின்னர் அவர் இறந்துவிட்டதாக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.

சிவபாலன் 1980 களில் தேசிய ஹாக்கி அணியின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் 1990 களில் தெனகா நேஷனல் பெர்ஹாட் (TNB) அணிக்காகவும் அப்போது Kilat Club என்று அழைக்கப்பட்ட அணியில் விளையாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here