தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்திற்கு (ATM) தீ வைத்த நபருக்கு போலீஸ் வலைவிரிப்பு!

மெர்சிங், மார்ச் 17 :

இங்குள்ள ஜாலான் இஸ்மாயிலில், நேற்று மாலை 7 மணியளவில் வங்கியின் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்திற்கு (ATM) தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மெர்சிங் மாவட்ட காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் சிரில் எட்ர்வர்ட் நுயிங் இதுபற்றிக் கூறுகையில், சந்தேக நபர் தீ மூட்டுவதற்கு முன்பு ATM இருந்த இடத்திற்குள் நுழைந்தது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

“இந்த சம்பவம் குறித்து இரவு 9.15 மணிக்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது என்றும் சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 436 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், மூத்த தீயணைப்பு அதிகாரி II அனுவார் ஹுசைன் கூறுகையில், சம்பவம் தொடர்பில் தகவல் பெற்றதும், மெர்சிங் மற்றும் எண்டாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களின் 17 உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

தீ கட்டிடத்தின் கட்டமைப்பில் சம்பந்தப்படவில்லை என்றும், தீயணைப்புத்துறையினரால் தீயை முழுமையாக அணைக்க முடிந்தது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here