மாணவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கிட்டத்தட்ட ஏரியில் விழுந்ததில், மாணவர் காயமின்றி உயிர் தப்பினார்

புத்ராஜெயா, மார்ச் 17 :

இன்று அதிகாலையில், மாணவர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, புத்ராஜெயா ஏரியில் கிட்டத்தட்ட கவிழ்ந்தது.

அதிகாலை 5 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற தோயோத்தா வியோஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து, ஏரியின் ஓரத்தில் கவிழ்ந்தது.

ஜாலான் பெர்சியாரான் தாசிக் சைபர்ஜெயா வழியாகச் செல்லும் போது, அந்த வழியாகச் சென்ற நாயைத் தவிர்க்க முயன்றதாக பாதிக்கப்பட்டவர் கூறியதாக சிப்பாங் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் நூர் அஹ்வான் முகமட் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, கட்டுப்பாட்டை இழந்த பாதிக்கப்பட்டவர் ஒட்டிச் சென்ற கார், ஏரியின் விளிம்பிற்கு நழுவியது, அதிஷ்டவசமாக அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

SOCAR நிறுவனத்தில் இருந்து அந்த கார் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்றும், அந்த காரை சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) இழுத்துச் செல்லுமாறு, அந்நிறுவனத்திடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், “வாகனத்தின் ஓட்டுநரையும் அறிக்கை செய்ய வருமாறு அறிவுறுத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here