தஞ்சோங் மாலிமில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி; 2 பேர் காயம்

தஞ்சோங் மாலிமில் உள்ள ஜாலான் சிலிம் லாமா பகுதியில் அதிகாலை கார் சறுக்கி, விளக்கு கம்பத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த இருவர் முஹமட் பாரிஸ் அம்ரன் (20) மற்றும் சையத் உமர் சயாஸ்ரிம் சையத் ஹாஷிம் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முஅல்லிம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் கூறுகையில், நள்ளிரவு 12.10 மணியளவில் புரோட்டான் வீரா ஏரோபேக் கார் விபத்துக்குள்ளானதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் 22 வயது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் உள்ள மின்விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதால் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட பயணி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

22 வயதான மற்றொரு பயணி, சிலிம் ரிவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும் 20 மற்றும் 23 வயதுடைய இரு பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் சாரதி முகம், கால்கள் மற்றும் கைகளில் காயங்களுக்கு உள்ளாகி சிலிம் ரிவர் மருத்துவமனையில் மேலதிக சிகிச்சை பெற்றதாகவும் அவர் கூறினார்.

பலியான இருவரின் சடலங்களும் ஒரே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கோவிட்-19 சோதனை முடிந்த பிறகு பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில், பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தஞ்சோங் மாலிம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 12.22 மணியளவில் சிக்கிய பயணிகளை மீட்பதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here