அம்னோ கட்சி தேர்தலை பொதுத் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்க முடிவு

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆறு மாதங்கள் வரை கட்சித் தேர்தலை ஒத்திவைக்க அம்னோ பொதுக்கூட்டத்தில் ஒப்புக்கொண்டதாக துணைத் தலைவர் முகமட் ஹசன் இன்று தெரிவித்தார்.

எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க இந்த முடிவு சங்கங்களின் பதிவாளருக்கு (RoS) தெரிவிக்கப்படும் என்றார். தாமதமான கட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு டிச.29ஆம் தேதி வரை பதிவாளர் காலக்கெடு விதித்திருந்தார்.

நிர்வாகக் குழுவின் தலைவர் என்ற முறையில், நான் முடிவு செய்ததை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தோக் மாட் என்று அழைக்கப்படும் முகமட், அம்னோவைச் சேர்ந்த ஒரு அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் சங்கங்களின் பதிவிலாகா இருப்பதால் கட்சி தடைகளை எதிர்கொள்ளும் என்று அஞ்சுவதாகக் கூறினார். (ROS ஐ மேற்பார்வையிடும் உள்துறை அமைச்சகம், பெர்சத்து மற்றும் பெரிகாத்தான் நேசனலின் பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுடின் கீழ் உள்ளது.)

கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடந்த அம்னோ பொதுக் கூட்டத்தில், “இந்த விஷயத்தை கவனிக்குமாறு நான் பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன்… எங்கள் வழியில் யாரும் நிற்க மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியில் ஒற்றுமையின்மையைத் தவிர்க்க இந்த ஒத்திவைப்பு தேவை என்று முகமட் கூறினார். கட்சி தேர்தல்கள் நடக்கும் போது உறுப்பினர்களிடையே பிளவு ஏற்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சியில் பிளவை நாங்கள் விரும்பவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here