திரெங்கானுவில் 13,000 க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இன்று முதல் கோவிட் -19 பூஸ்டர் டோஸைப் பெறுகிறார்கள்

கோலத்திரெங்கானு: சுமார் 13,000 திரெங்கானு சுகாதாரத் துறை ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை (அக் 17) தொடங்கி கோவிட் -19 பூஸ்டர் டோஸ் பெற உள்ளனர்.

சுகாதரத்துறை இயக்குநர், டத்தோ டாக்டர் கேசெமனி எம்போங் இது பற்றி கூறுகையில், பூஸ்டர் தடுப்பூசிகள் தானாக முன்வரும் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் என்று கூறினார்.

“மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இரண்டாவது டோஸுக்குப் பிறகு தடுப்பூசியின் சக்தி ஆறு மாதங்களில் காலாவதியாகும் என்பதுதான்.

மாநில அளவில் சுகாதார அமைச்சகத்திற்கு சொந்தமான ஆறு அரசு மருத்துவமனைகள் மற்றும் 20 தடுப்பூசி மையங்கள் (PPV) சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவதில் ஈடுபடும்.

மேலும் , மூத்த குடிமக்களுக்கும் முன்களப்பணியாளர்களுக்குமான பூஸ்டர் டோஸ் வழங்கும் நடவடிக்கையும் தனியார் PPV மையங்களில் விரைவில் ஆரம்பிக்கப்படும் , என்றார்.

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here