போதைப்பொருட்களை பதப்படுத்தி, விநியோகம் செய்ததாக நம்பப்படும் கும்பலின் தலைவன் உட்பட இருவர் கைது!

ஜார்ஜ்டவுன், மார்ச் 21 :

கடந்த வியாழக்கிழமை, இங்குள்ள செபெராங் பிறை தெங்காவைச் சுற்றி பினாங்கு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட, இரண்டு தனித்தனி சோதனைகள் மூலம் RM381,160 மதிப்புள்ள ஹெரோயின் மற்றும் சியாபு போதைப்பொருட்களை பதப்படுத்தி, விநியோகம் செய்ததாக நம்பப்படும் கும்பலின் தலைவன் உட்பட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் இதுபற்றிக் கூறும்போது , செபெராங் பிறை தெங்காவில் உள்ள ஒரு வீட்டில் முதல் சோதனை நடத்தப்பட்டது, 18,540 கிராம் எடையுள்ள 42 ஹெரோயின் பொட்டலங்களும் 745 கிராம் எடையுள்ள இரண்டு ஹெராயின் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், 895 கிராம் எடையுள்ள சியாபு பொட்டலமும், காஃபின் பவுடர் (16,275 கிராம்) கொண்ட வெளித்தெரியும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மற்றும் ஹெரோயின் பதப்படுத்துவதற்கான உபகரணங்கள் மற்றும் இரசாயனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

“முதல் சந்தேக நபரின் கைதினைத் தொடர்ந்து, மேலும் ஒரு வீட்டில் இரண்டாவது சோதனைக்கு வழிவகுத்தது அங்கு இந்த போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவரான மற்றொரு நபரை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்களின் சிறுநீர் பரிசோதனையின் முடிவுகளில், 30 மற்றும் 41 வயதுடைய இரு சந்தேக நபர்களும் போதைப்பொருள் நெகட்டிவ்வான பதிலை பெற்றனர். ஆனால் அவர்கள் குற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான முந்தைய பதிவுகளைக் கொண்டிருந்தனர்” என்று இன்று பினாங்கு காவல் படைத் தலைமையகத்தில் (IPK) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். ,

மேலும் கருத்து தெரிவித்த முகமட் ஷுஹைலி, உள்ளூர் சந்தைக்கு விநியோகம் செய்வதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்தக்கும்பல் செயல்பட்டது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

சந்தேக நபர்களிடமிருந்து ஐந்து வாகனங்கள், நகைகள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சொத்துக்களின் மதிப்பு மொத்தம் RM650,777 ஆகும். கைப்பற்றப்பட்ட அனைத்து போதை மருந்துகளும் 190,000 போதைபித்தர்கள் பயன்படுத்த போதுமானது எனவும் மதிப்பிடப்பட்டது.

இரண்டு சந்தேக நபர்களும் மார்ச் 24 வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 மற்றும் ஆபத்தான மருந்துகள் (சொத்து பறிமுதல்) சட்டம் 1988 இன் பிரிவு 39B இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகின்றது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here