கொட்டகையில் ஏற்பட்ட தீயில் 35க்கும் மேற்பட்ட ஆடுகள் மடிந்தன

ஈப்போ, தாமான் தெமாரா பாசீர் புத்தேயில் இன்று அதிகாலை நடந்த சம்பவத்தில், கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் 35க்கும் மேற்பட்ட ஆடுகள் மடிந்தன.

இன்று அதிகாலை 12.30 மணியளவில் தீ விபத்து குறித்து நிலையம் எச்சரிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து தீயணைப்பு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் பாசீர் புத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய இயக்கத் தலைவர் மூத்த தீயணைப்பு அதிகாரி II ரோசைடி கமருல்ஜமான் தெரிவித்தார்.

கொட்டகையில் 57 ஆடுகள் இருந்தன. அவற்றில் 35 ஆடுகள் தீயில் கொல்லப்பட்டன. ஆனால் எந்த உயிரிழப்பும் இல்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதிகாலை 1.30 மணியளவில் தீயை அணைக்கும் பணி நிறைவடைந்ததாகவும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here