ஜோகூரில் RM796,270 மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது!

ஜோகூர் பாரு, மார்ச் 22 :

கடந்த சனிக்கிழமை, கூலாய் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து சோதனைகளில், பல்வேறு வகையான போதைப்பொருட்களை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் இதுபற்றிக் கூறுகையில், இரவு 7 மணி முதல் 9.40 மணி வரை நடந்த இந்த நடவடிக்கையில், கைது செய்யப்பட்ட அனைவரும் 32 முதல் 46 வயதுடையவர்கள் என்றார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மொத்தம் RM796,270 மதிப்புள்ளதும், மொத்தம் 127.73 கிலோகிராம் எடையுடையதுமான ஹெரோயின், சியாபு, கஞ்சா மற்றும் மேஜிக் காளான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் கூறினார்.

“இந்த கும்பலின் செயல்பாடானது, கார்கள் மற்றும் லாரிகள், பயணிகள் இருக்கைகள் போன்றவற்றில் போதைப்பொருட்களை விநியோகிப்பதற்கு முன் அவற்றை மறைத்து வைப்பதாகும். இந்த போதைப்பொருள் விநியோகம் வடக்கில் உள்ள அண்டை நாட்டிலிருந்து கடத்தப்படுவதாக நம்பப்படுகிறது, மேலும் போதைப்பொருள் இந்த மாநிலத்திலும் அண்டை நாடுகளிலும் சந்தைப்படுத்தப்படுகிறது, ”என்று அவர் இன்று ஜோகூர் காவல் படைத் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும் அவர்களிடமிருந்து ஒரு petal மற்றும் 6 பாவிக்காத தோட்டாக்கள் கொண்ட ஒரு Baretta துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றியதாக கமாருல் ஜமான் கூறினார்.

இது தவிர, ஆறு வாகனங்கள் மற்றும் RM235,584 மதிப்புள்ள பல்வேறு வெளிநாட்டு நாணயங்கள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டன.

“சிறுநீர் பரிசோதனையின் முடிவுகள், சந்தேக நபர்களில் நான்கு பேர் மெத்தாம்பேட்டமைனுக்கு சாதகமாக இருப்பதைக் கண்டறிய முடிந்தது, அவர்களில் மூவருக்கு முந்தைய போதைப்பொருள் தொடர்பான குற்றவியல் பதிவுகள் உள்ளன.

இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B மற்றும் துப்பாக்கிகள் (கடுமையான தண்டனைகள்) சட்டம் 1971 இன் பிரிவு 8 இன் படி மேலதிக விசாரணைக்கு உதவும் வகையில் அனைத்து சந்தேக நபர்களும் மார்ச் 20 முதல் 26 வரை 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here