டுங்கூன், மார்ச் 22 :
நேற்று, இங்குள்ள கம்போங் பாரு கோல அபாங்கில் உள்ள அவர்களது வீட்டுத் தோட்டத்தில், குரங்கு தாக்கியதில் 7 வயது சிறுவன் ஒருவர் காயமடைந்தார்
மாலை 6.55 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 7 வயது முஹமட் உமர் ஜியாத் ஜஹாருடின் இடது கை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டது.
சம்பவத்திற்கு முன்னர், பாதிக்கப்பட்டவரின் தாயார் சுசிலாவதி இஸ்மாயில், 39, இதுபற்றிக் கூறுகையில், அவரும் பாதிக்கப்பட்டவரும் அவரது மற்றோரு மகனும் தனது வீட்டிற்கு அடுத்ததாக அமைந்துள்ள தனது சகோதரியின் வீட்டில் இருந்ததாக கூறினார்.
“பாதிக்கப்பட்ட முஹமட் உமர் தான் முன்பு வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்டார், திடீரென்று அவர் சத்தமாக கத்துவதை நான் கேட்டேன்.
“நான் என் சகோதரியின் வீட்டிலிருந்து கீழே ஓடினேன், மகனின் கெண்டைக் காலின் மீது ஒரு குரங்கு இருப்பதைக் கண்டேன், பின்னர் பாதிக்கப்பட்ட மகன் வலியால் அலறிக்கொண்டு, குரங்கின் கடித்ததை விடுவிக்க முயன்றார்,” என்று அவர் கூறினார்.
மேலும் சிறுவனின் அலறலை கேட்ட, வீட்டில் இருந்த தனது கணவர் உடனடியாக தனது மகனைக் காப்பாற்ற கீழே இறங்கியதாகவும் அதனைத் தொடர்ந்து குரங்கு தப்பித்து ஓடியதாகவும் அவர் கூறினார்.
“குரங்கு நகத்தால் கிறியதால் மகனின் கை, கால்கள் இரத்தத்தில் மூழ்கியிருப்பதையும், கால்களில் குரங்கு கடித்ததால் அந்த காயத்தின் தடயங்கள் மிகவும் பெரியதாகவும் ஆழமாகவும் இருந்ததைப் பார்த்து நான் மிகவும் பயந்தேன்.
உடனடியாக “தனது கணவர் மகனை டுங்கூன் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார்” என்று அவர் கூறினார்.
“மகனது காயங்கள் மிகவும் மோசமாக இருந்தாலும், அவர் பாதுகாப்பாக இருப்பதற்கு நான் இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இந்தச் சம்பவம் குறித்து டுங்கூன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்” என்றும் அவர் கூறினார்.








