அனைத்துலக மாநாடுகளில் பிரதமர் மலாய் மொழியில் உரையாற்றுவார் – வெளியுறவு அமைச்சர் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 24 :

இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவிருக்கும் இரண்டு அனைத்துலக மாநாடுகளில், பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உரையாற்றும் போது மலாய் மொழியை பயன்படுத்துவார் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா கூறினார்.

“இவ்வளவு பெரிய மாநாட்டில் கலந்துகொள்ளும் பிற நாடுகளின் தலைவர்களும் தங்கள் தேசிய மொழியைப் பயன்படுத்துகிறார்கள், எனவே நாங்கள் மலாய் மொழியில் பேசுவதை சங்கடமாக உணரத் தேவையில்லை.

“அடுத்த வாரம், பிரதமர் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்களுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்வார், அங்கும் அவர் மலாய் மொழியை பயன்படுத்துவார்,” என்று அவர் இன்று நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நேற்று, பிரதமர் இஸ்மாயில் சப்ரி, தாய்மொழியை (மலாய்) சர்வதேச அளவில் உயர்த்தும் முயற்சிகளில் ஒன்றாக ஆசியானின் இரண்டாவது மொழியான மலாய் மொழியை பயன்படுத்தி, ஆசியான் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்தார்.

பிரதமரின் அபிலாஷைகளை அமைச்சகம் முழுமையாக ஆதரிப்பதாகவும், விஸ்ம புத்ரா மொழிபெயர்ப்புடன் மலாய் மொழியை பயன்படுத்தி, வெளிநாட்டு நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ கடிதங்களை அனுப்பத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here