கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,093 ஆக உயர்வு

கோத்தா பாரு:

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்றிரவு 4,840 ஆக இருந்த நிலையில், இன்று காலை 5,093 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு 1,622 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 5,093 பேரும் அங்குள்ள இரண்டு மாவட்டங்களில் இயங்கிவரும் 16 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, கிளந்தானில் பாசீர் மாஸ் மற்றும் தானா மேரா ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன.

சமூக நலத் துறையின் (JKM) பேரிடர் தகவல் போர்ட்டலின் அடிப்படையில், பாசீர் மாஸில் மட்டும் 4,969 பேர் அங்குள்ள 15 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தானா மேராவில் உள்ள ஒரு நிவாரண மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 124 பேர் தங்கவைக்கப்படுள்ளனர்.

இதற்கிடையில், publicinfobanjir.water.gov.my இணையதளத்தின் படி, ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள கோலோக் ஆற்றின் நீர் மட்டமி இன்னும் (10.08 மீட்டர்)அபாய அளவைத் தாண்டியுள்ளதாகவும், தும்பாட்டின் கோலா ஜம்புவில் உள்ள கோலோக் ஆறு (2.32 மீ) எச்சரிக்கை அளவைத் தாண்டியதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here