ஷெல் கனோவிட் படகுத்துறை அருகே பெண் ஒருவரின் சடலம் மிதந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டது

கனோவிட், மார்ச் 24 :

இங்குள்ள சுங்கை பாடாங் ராஜாங்கில் உள்ள ஷெல் கனோவிட் படகுத்துறை அருகே பெண் ஒருவரின் சடலம் மிதந்து கிடக்க காணப்பட்டது.

சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை மையத்தின் செய்தித் தொடர்பாளர் இதுதொடர்பில் கூறுகையில், இன்று நண்பகல் 12.50 மணியளவில் கானோவிட் காவல் நிலையத்தில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து தங்களுக்கு அறிக்கை கிடைத்தது.

“பெண்ணின் உடல் முழுவதுமாக உடையணிந்து, அதாவது கருப்பு பேன்ட் மற்றும் டி-சர்ட் அணிந்திருந்தது. ஆனால் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருந்த கனோவிட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள் உடலை எடுத்துச் சென்று, மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைத்தனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here