இணையத்தில் வைரலாகும் நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி நிச்சயதார்த்த புகைப்படம்

நடிகர் ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் இரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

டார்லிங் படத்தின் மூலம் தமிழின் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்க, தேவ், கீ, ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதேபோல் மிருகம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ஆதி தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவாண், வல்லினம், கோச்சடையான், மரகத நாணயம், யூ டர்ன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து யாகாவராயினும் நாகாக்க, மரகதநாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த ஜோடி ரீல் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ரியல் லைஃப்பிலும் ஜோடியாகியுள்ளனர். இவ்விரு படங்களில் ஏற்பட்ட பழக்கம் இருவருமிடையே காதலாக மாறியது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆதியின் அப்பா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிக்கி கல்ராணி கலந்துகொண்டார். அப்போதே அவர்கள் இருவரும் காதலில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இருவருமே அதனை ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் ஆதி – நிக்கி கல்ராணி இடையேயான நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here