புத்ரா ஜெயா,
தப்பியோடிய தொழிலதிபர் லோ தொக் ஜோ அல்லது ஜோ லோ தற்போது சீனாவின் ஷாங்காயில் வசித்து வருகிறார் என்ற கூற்றுகள் குறித்து மலேசியாவுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
போலி ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்துவதாகக் கூறப்படும்1MDB நிதி ஊழலில் முக்கிய நபர் ஜோ லோ தொடர்பான விஷயத்தை உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபூடின் நசுத்தியோன் இஸ்மாயிலுடன் சரிபார்க்க போவதாக அன்வார் கூறினார்.
“எனக்கு எந்த தகவலும் இல்லை, அவர் குறித்து எங்களுக்கு இன்னும் எதுவும் கிடைக்கவில்லை. ஊடக செய்திகளில்தான் நான் படித்தேன், எனவே நான் உள்துறை அமைச்சருடன் சரிபார்க்க வேண்டும், “என்று அவர் நேற்று தெலுக் கும்பாரில் உள்ள மடானி வளாகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.





















