இனி முகக்கவசம் தேவையில்லா? செய்தியில் உண்மையில்லை என்கிறது தேசிய பாதுகாப்பு கவுன்சில்

தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சகத்தின் (K-KOMM) விரைவான பதிலின் ஊடக அறிக்கையின்படி, 29ஆம் தேதி மார்ச் முதல் முகக்கவசம் தேவையில்லை என்று சமூக ஊடகங்களில் ஒரு சுவரொட்டியில் வைரலான செய்தியை தேசிய பாதுகாப்பு கவுன்சில் (MKN) மறுத்துள்ளது.

சுவரொட்டியின் உள்ளடக்கங்கள் தவறானவை என்றும், இதுபோன்ற பொய்யான செய்திகளை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக பொறுப்பான குடிமக்களாக (டிஜிட்டல் தகவல் அறிந்தவர்களாக) இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. உண்மையான மற்றும் சமீபத்திய தகவல்களைப் பெற பொதுமக்கள் அதிகாரப்பூர்வ ஆதாரங்களைப் பார்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here