நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் ராம்சரணுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறது. இந்த செய்தி ராம்சரண் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் நடிகர் ராம் சரண் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். பல்கலைக்கழக வேந்தர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் ராம்சரணுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.

திரைப்படத் துறை மற்றும் சமூகத்திற்கு ராம்சரண் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமிதம் கொள்வதாக வேல்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’ஆந்திரப் பிரதேசம் முதல் தெலங்கானா வரை பல்வேறு பகுதிகளில் உள்ள சமூகங்களை மேம்படுத்த தனது தந்தை சிரஞ்சீவியுடன் இணைந்து பணியாற்றுகிறார். குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்களின் போது ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கினார்’ போன்ற காரணங்களையும் முன் வைத்துள்ளது வேல்ஸ் நிறுவனம்.

மேலும், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் மூலமாக உலக பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்தார் ராம்சரண். முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here